News August 9, 2024
திருவாரூர் அருகே தீயில் கருகி ஒருவர் பலி

நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியில் நேற்று மாலை, இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் முழுவதும் எறிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரைக் கொண்டு அணைத்துள்ளனர். ஆனால் இரு சக்கர வாகனமும் அடையாளம் தெரியாத நபரும் முழுவதுமாக எரிந்து கருகிய நிலையில், இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீரா ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீராய்வு எஸ்ஐஆர் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News December 13, 2025
திருவாரூர்: ரயில் எண்கள் மாற்றம்

ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் எண்களில் இயங்கும் திருவாரூர்- காரைக்குடி ரயில் பழைய எண் 06197 புதிய எண் 56827, காரைக்குடி – திருவாரூர் ரயில் பழைய எண் 06198 புதிய எண் 56828, திருவாரூர் -பட்டுக்கோட்டை ரயில் பழைய எண் 06851 புதிய எண் 76831, பட்டுக்கோட்டை – திருவாரூர் பழைய எண் 06852 புதிய எண் 76832 என்ற நிரந்தர எண்களின் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
திருவாரூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


