News May 14, 2024
திருவாரூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 35ஆவது இடம்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவாரூர் மாவட்டம் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 71.10% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.40 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 79.71 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 20, 2024
திருவாரூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் (நவ.20) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவலை பகிரவும்!
News November 20, 2024
கிராமசபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் வரும் 23 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
திருவாரூர் மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் உட்பட நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.