News April 9, 2025

திருவாரூர் அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு

image

ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் அங்கன்வாடி பணியாளர் 60, உதவியாளர் 14 இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, <>அதிகாரபூர்வர் இணையத்தில்<<>> விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 24.04.25 மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை SHARE பண்ணுங்க…

Similar News

News December 17, 2025

திருவாரூர்: விவசாய கூலித்தொழிலாளி தற்கொலை

image

முத்துப்பேட்டை, மேலநம்மங்குறிச்சியைச் சேர்ந்தவர் காசிநாதன் (50). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு சமீபகாலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த காசிநாதன் சம்பவத்தன்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் அய்யாதுரை முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பந்திது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 17, 2025

திருவாரூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

திருவாரூர்: நீரில் மூழ்கி மீனவர் பலி!

image

முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரவி(58). இவர் நேற்று வளவனாற்றின் கடல் முகத்துவாரம் அருகே வலைவிரித்து மீன் பிடித்துள்ளார். அப்போது, திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் நீரில் மூழ்கி பலியான மீனவர் ரவியின் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!