News August 25, 2024
திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
திருவாரூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவாரூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 5.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருவாரூர்: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


