News May 16, 2024
திருவாரூரில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 4, 2025
திருவாரூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

திருவாரூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
திருவாரூர்: வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு

திருவாரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் சௌந்தர்ராஜன் தற்போது பணி மாறுதலில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் பணியாற்றி வரும் வட்டார கல்வி அலுவலர்கள் இணைந்து அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
News December 4, 2025
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் WAR ROOM அமைப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக வெள்ள கட்டுப்பாட்டு அறை (WAR ROOM) திறந்து வைக்கப்பட்டு 24 மணி நேரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை சம்பந்தமான முன்னெச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள 1077 என்ற எண்ணிற்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


