News January 23, 2025
திருவாரூரில் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜன.24) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
திருவாரூர்: இனி பெற்றோர்களுக்கு சிறை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், பெற்றோர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை, ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும், கவனிக்கத் தவறிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்: மின் கம்பி அறுந்து விழுந்ததில் உயிர் பலி

முத்துப்பேட்டை, வீரன்வயல் அருகே வைரவன் சோலையில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியை கடந்து சென்ற ராமகோவிந்தன்(35) என்பவரது பசுமாடு மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் இறந்த மாட்டை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.