News April 15, 2025
திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
திருவாரூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 7, 2025
திருவாரூர் அருகே அரசு மருத்துவமனையில் ரகளை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விமலநாதன் (23) என்ற வாலிபர் காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக கடும் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை விமலநாதன் ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட விமலநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
திருவாரூர்: பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை!

எரவாஞ்சேரி பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த லலிதா, அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லலிதாவிற்கு போக்கோ சட்டத்தின் கீழ் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


