News November 25, 2024

திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு, கடலோர தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.25) மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!

Similar News

News January 10, 2026

மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி பகுதியில் நடைபெற்று வரும் நாம் காக்கும் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சியர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு திட்ட முகாம்களில் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் இன்று தனது உடல் நிலையை முகாமில் பரிசோதனை செய்து கொண்டார்.

News January 10, 2026

திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

திருவாரூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 10, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் பொங்கல் பரிசு, பொங்கல் வாழ்த்து, பொங்கல் சலுகைகள் என்று அரசின் பெயரிலோ, முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் மோசடியிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!