News April 14, 2025
திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!.. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..
Similar News
News January 3, 2026
திருவாரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 3, 2026
திருவாரூர்: இன்று இதை MISS பண்ணாதீங்க!

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (ஜன.03) மற்றும் நாளை (ஜன.04) காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் தொடர்பான சிறப்பு முகம் நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமில் 1-1-2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
திருவாரூர்: கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை!

திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 137 கூட்டுறவு வங்கிகளில் 1,300 டன் யூரியா உரம், 439 டன் டி.ஏ.பி. மற்றும் 647 டன் காம்ப்ளக்ஸ் உரமும் கையிருப்பில் உள்ளது. மேலும் தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


