News January 24, 2025
திருவாரூரில் ட்ரோன் பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கிராமப்புற விவசாயத் திறனை மேம்படுத்துதல் திட்டத்தில் ட்ரோன் பைலட் பயிற்சி மற்றும் ட்ரோன் பராமரிப்பு பயிற்சி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பயன்பெற நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம். SHARE NOW!
Similar News
News October 17, 2025
திருவாரூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க…
News October 17, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 16, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருவாரூர், சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான், இலை சுருட்டு புழு தாக்குதல்களும் உவர் தன்மையால் பாசிகள் பரவலாக காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாசி தடுப்பு மருந்துகளை தெளித்து, நீர்நிலைகள் சீராக வற்றாமல் பராமரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் எச்சரித்து அறிவுறுத்தியுள்ளார்.