News August 18, 2024
திருவாரூரில் சர்வதேச திரைப்பட விழா

திருவாரூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை தைலம்மை திரையரங்கில் சர்வதேச திரைப்பட விழா லோகோ வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் கொள்ளு பேரன் கொள்ளுப்பேத்தி திருவாரூரில் வசிப்பதை அறிந்து அவர்களை மேடையில் அறிமுகப்படுத்தி பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Similar News
News November 4, 2025
திருவாரூர் வருகை தந்த பிரபல நடிகர்!

பக்ரைனியில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டியில், வடுவூர் பகுதியில் சேர்ந்த அபினேஷ் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றார். அவரை வாழ்த்தும் விதமாக நேரடியாக வடுவூருக்கு வந்த நடிகர் துருவ் விக்ரம் அபினேஷை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News November 4, 2025
திருவாரூர்: சாராயம் கடத்திய இருவர் கைது

நன்னிலம் பேரளம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தி வந்த புதுச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 4, 2025
திருவாரூர்: காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2025 – 2026ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 15.11.2025-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பயிர் காப்பீட்டுதல் கட்டணமாக சம்பா நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1393 செலுத்தி, விவசாயிகள் பயனடையலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…


