News August 7, 2024
திருவாரூரில் கருணாநிதிக்கு எல்எல்ஏ மரியாதை

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி திமுக கட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், பேரூர் செயலாளர் கலைவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 11, 2025
திருவாரூர்: பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி பகுதியில் டிசம்பர் 13-ம் காலை 10 மணி அளவில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்களாக பெறப்படுகிறது. மேலும் இந்த முகாம் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News December 11, 2025
திருவாரூர்: இதற்கு இன்றே கடைசி

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளையும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்து நிரப்பி வாங்கும் பணிகள் நடைபெற்று, தற்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் இன்று (டிசம்பர் 11) மாலைக்குள் நிலை அலுவலரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News December 11, 2025
திருவாரூர்: மன்னார்குடி-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க மனு

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து தொகுதி தொடர்பான ரயில்வே கோரிக்கைகளை வழங்கினார். மன்னார்குடி-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினார்.


