News August 9, 2024
திருவாரூரில் கடன் மேளா – ஆட்சியர் அழைப்பு

திருவாரூர் ஆட்சியர் இன்று (ஆக.09) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்க கடன்மேளா வரும் 14ஆம் தேதி குடவாசல்,21ஆம் தேதி வலங்கைமான்,28ஆம் தேதி நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது.கடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கண மழை பெய்தது. மற்றும் டிட்டா புயல் எதிரொலி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் சம்பா, மற்றும் தாளடி, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனை கணக்கெடுக்கும் பணி வருவாய்துறை மற்றும் வேளாண் துறை சார்பில் இன்று (டிச 1) தொடங்கும் என மாவட்ட வேளாண்மை இணைய இயக்குனர் பால சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 30) இரவு 10 மணி முதல் நாளை (டிசம்பர் 1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 30, 2025
திருவாரூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


