News March 24, 2025
திருவாரூரில் இன்று விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (மார்ச்.24) அந்தந்த நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்திருந்தார். எனவே அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News November 24, 2025
திருவாரூர்: வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை மேலக்காட்டை சேர்ந்த தனியார் பள்ளி ஓட்டுநர் பாலசக்தி (30) என்பவர், லாரி ஓட்டுனரான கீழக்காடு எம்கே நகரை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரை, ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து பாலசக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 24, 2025
BREAKING: திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
BREAKING: திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை!