News April 11, 2025
திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 13, 2025
திருவாரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள இனி அலைய வேண்டாம். <
News October 13, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்.15,17,18-ல் புதுகை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட, மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 13, 2025
திருவாரூர்: வெறி நாய் கடித்து பெண்மணி படுகாயம்

இடும்பவனம் அடைஞ்சவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவர் விவசாய வேலை செய்வதற்காக பக்கத்து ஊரான மேலவாடிய கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது சாலையில் நின்ற நாய் ஒன்று அந்த பெண்மணியை கடித்து குதறியதில் கை கால் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்த்து உடனடியாக அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.