News August 8, 2024
திருவானைக்கோவிலில் வேலைவாய்ப்பு

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய தளம் வாயிலாக வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
திருச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோட்டைக்காரன்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது வீட்டில் தோட்ட வேலைக்கு வந்த கரூரைச் சேர்ந்த பாபு என்பவர், மைதிலி மற்றும் அவரது கணவர் சம்பத் ஆகியோரை கொடூரமாக தாக்கி வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் டூவீலரை திருடி சென்றுள்ளார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி பாபுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 6, 2025
திருச்சி: இன்று குடிநீர் வராது!

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணி இன்று (டிச.6) நடைபெற உள்ளது. இதனால் திருச்சி மத்திய சிறைச்சாலை, காஜாமலை, ரங்கா நகர், சுப்பிரமணியநகர், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, அம்மா மண்டபம், மேலூர், தேவிபள்ளி விறகுபேட்டை, சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


