News December 6, 2024

திருவாடானை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

image

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை குரூப் கரைய கோட்டை கிராமத்தில் இன்று இரைதேடி குடியிருப்புக்குள் சென்ற புள்ளிமான் ஒன்றை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 14, 2025

ராமநாதபுரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 14, 2025

ராமநாதபுரத்தில் புதிய ஊராட்சி ஒன்றியம்: எம்.பி

image

சிக்கல் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதத்தில் கடலாடி ஒன்றியத்திலிருந்து சிக்கல் சுற்றுவட்டார ஊராட்சிகளை பிரித்து, சிக்கல் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, புதிய ஒன்றியத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

கமுதி அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்

image

கமுதி பகுதியைச் சோ்ந்த ராமு மகன் ராமா் (27). இவரை கமுதி கண்ணார்பட்டி மதுபான கடையின் பின்புறத்தில் 4 இளைஞா்கள் கத்தியால் தாக்கி அவரது கைப்பேசியில் ஜிபே மூலம் ரூ.800 தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பியதுடன் கைப்பேசியையும் பறித்துக் கொண்டனர். போலீசார் கமுதியை சோ்ந்த வசந்தகுமாா்( 18), முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த லிங்கம் (21) மற்றும் 16, 17 வயதுடைய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!