News May 10, 2024
திருவள்ளூர் 35ஆவது இடம்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 80.06% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 74.24 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.85 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News April 19, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (19/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
News April 19, 2025
திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆர்.கே. பேட்டை-044-27845709, ஆவடி-044-26850313, திருவள்ளூர்-044-27660254, பூவிருந்தவல்லி- 044-26274314, ஊத்துக்கோட்டை-044-27630262, கும்மிடிப்பூண்டி-044-27921491, பொன்னேரி-044-27972252, திருத்தணி-044-27885222, பள்ளிப்பட்டு-044-27843231. *மிக முக்கிய நம்பர்களான இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 19, 2025
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.