News March 28, 2024
திருவள்ளூர்: வேட்பு மனு நிராகரிப்பு

திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் கந்தனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டிருந்ததாக, நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Similar News
News July 5, 2025
பிரசித்திபெற்ற பைரவர் கோயில்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆகாஸ பைரவர் ஆலையம் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பே அஷ்ட பைரவர்கள் எட்டு பைரவர்கள் உள்ளனர். ஒரே இடத்தில் இந்த 8 பைரவர்களை தரிசனம் செய்யும் அற்புத தலமாக உள்ளது. மேலும், தொலைந்த பொருளை மீட்க, செல்வம் பெருக இங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் திருமணத்தடை நீங்க ஞாயிறு அன்று ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News July 5, 2025
ஆரம்பாக்கம் பகுதி நெடுஞ்சாலை சாலையில் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பஜார் பகுதி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள, இணைப்பு சாலையில் சிறு வியாபாரிகள் காய்கறிகள் பழங்கள் பூ மாலைகள் என வியாபாரம் செய்ய பந்தல் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இணைப்பு சாலை வழியாக அரசு பேருந்துகள் செல்ல முடியாத நிலை, தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்கிறது. எனவே வியாபாரிகளுக்கு மாற்றிடம் தந்த போக்குவரத்து துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுப்பு.
News July 5, 2025
திருவள்ளூரில் புதிய கட்சி துவங்கிய ஆர்ம்ஸ்டராங்க் மனைவி

திருவள்ளூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 5) தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி எனும் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிற கொடி எழுதுகோலை துதிக்கையில் ஏந்திய யானை சின்னத்துடன் உதிக்கும் வெள்ளை நிற சூரியன் உடன், புதிய கட்சி உதயமானது.