News April 23, 2025

திருவள்ளூர் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 25.4.2025 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் தெரிவித்தார். இதில் விவசாயம், மின்சாரம் கூட்டுறவு, மீன்வளம், வணிகத்துறை ஆகியவற்றின் மீது மற்றும் பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்தார். *தெரிந்த விவசாயிகளுக்கு பகிரவும்*

Similar News

News January 11, 2026

திருவள்ளூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருவள்ளூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ALERT!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்

News January 11, 2026

திருவள்ளூர்: மண் குவியல் எமனானது

image

வேலூர் மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு தற்காலிக ஊழியர் விவேக் குமார் (35), தனது அண்ணன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜூ பேட்டை பகுதியில் சாலை பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!