News April 9, 2025
திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 3.25 லட்சம் கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.86.82க்கு விற்பனை செய்யப்படும். செங்குன்றத்தில் 2.75 லட்சம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டியில் தலா 25,000 கிலோ கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்’ என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
திருவள்ளூர்: பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
திருவள்ளூர்: குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி சோழியம்பாக்கத்தை சேர்ந்த சேது-சங்கீதா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷினி. இன்று காலை குழந்தை தர்ஷினி வீட்டில் யாரும் கவனிக்காத போது அருகில் இருந்த குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 8, 2025
திருவள்ளூர்: 8th போதும், அரசு வேலை!

திருவள்ளூர் மக்களே! தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், காவலர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-வது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,000 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோட்டப் பொறியாளர்களிடம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


