News November 22, 2024

திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காணலாம். இக்கூட்டத்தில் அனைத்து விவசாய பெருமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

தொழிற்பயிற்சி நிலையங்கள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

2025-ஆம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம், செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு, மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News September 17, 2025

திருவள்ளூர்: சாலைகளில் கொடி, பேனர்களுக்குத் தடை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளிலும் (Centre Median), தற்காலிகமாக எந்தவிதமான கொடிகளும் அமைக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

News September 17, 2025

திருவள்ளூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த<<>> தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!