News March 20, 2024
திருவள்ளூர்: லாரி மோதி +2 மாணவி உயிரிழப்பு

புழல் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி, அவரது மகள் ஜெயபாரதி +2 மாணவி. ஜெயபாரதியுடன் தயாநிதி பைக்கில் ஆத்தூர் மேம்பாலம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி ஜெயபாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தயாநிதியின் 2 கால்கள் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் பாரத் சர்மாவை போலீசார் கைதுசெய்தனர்.
Similar News
News November 16, 2025
திருவள்ளூர்: தண்ணீர் டிராக்டர் மோதி குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சார்ந்த சந்தியாவின் 2 வயது மகள் விஜிதா நேற்று (நவ.15) எதிர்பாராத விதமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் டிராக்டரில் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக குழந்தை நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து டிராக்டர் டிரைவர் தேவன் (53) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 16, 2025
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

திருவள்ளுவர் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <


