News April 8, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12 ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான குறைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்
Similar News
News December 15, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 145, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 88, வேலைவாய்ப்பு வேண்டி 74, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 24, இதர துறைகள் சார்பாக 102 என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
News December 15, 2025
தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.15) தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தங்களின் பணிநிலை, சம்பளம், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
News December 15, 2025
திருவள்ளூர்:கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


