News April 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு PM Apprenticeship Mela (PMNAM) நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் இந்த நிகழ்வில், அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன. ITI தேர்ச்சி பெற்றவர்களும் NAC சான்றிதழ் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
Similar News
News March 11, 2026
JUST IN: புழல் அருகே பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர்: புழல் அருகே புத்தகரம் பகுதியில் உள்ள ஓர் மளிகைக் கடையில் மின் கசிவு காரணமாக, குளிர் சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின. விஜயகுமார் என்பவர் இந்த மளிகைக் கடையை 2 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இன்று(மார்ச் 11) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து, குளிர் சாதனப் பெட்டியை ஆன் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
News March 11, 2026
துணை ராணுவப் படை திருவள்ளூருக்கு வருகை!

திருவள்ளூர் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் துணை ராணுவ படை வீரர்கள் திருவள்ளுவருக்கு வருகை தந்தனர். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். மேலும, 360 துணை ராணுவ படை வீரர்கள் வர உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
News March 11, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்!

இந்திய ராணுவத்தில், ‘அக்னி வீர் திட்டத்தின் கீழ் திருமணமாகாத இருபாலருக்கும் 2027ஆம் ஆண்டிற்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு, பிப்.13ல், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு, ஏப்.1ஆம் தேதி முடிவடைகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


