News April 3, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Medical Officer, Special Educator, Psychologist ஆகிய பதவிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Ed, B.Sc, BA, M.Ed, M.Sc, MA, MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு <
Similar News
News September 18, 2025
திருவள்ளூர்: வேலை தேடுபவர்களுக்கு குட்நீயூஸ்

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருவள்ளூர் இளைஞர்களே கடைசி வாய்ப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து மாணவர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருவள்ளூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் சாலையோரம் மற்றும் தடுப்புகளில் கட்சி, இதர அமைப்புகள் கொடிகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும், மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலைகளின் இரு பக்கங்களிலும் மையப்பகுதியில் கட்சி கூட்டம் நடைபெறும் போது கொடிகள் அமைக்க கூடாது என ஆட்சியர் கூறியுள்ளார்.