News August 17, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

திருவள்ளூரில் இன்று பல்வேறு பகுதிகளில் (ஆக.17) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருத்தணி, அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, கடம்பூர், காக்களூர், பூண்டி, செவ்வாப்பேட்டை, தண்ணீர்குளம், பெரும்பாக்கம், பாணம்பாக்கம், மணவூர், களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, திருநின்றவூர், நத்தம்பேடு, வேப்பம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Similar News
News October 15, 2025
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (15.10.2025) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகள் கேட்டு உடனடி தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
News October 15, 2025
திருவள்ளூர்: லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ரெய்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லோகநாதன். இவரது வீடு காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததில் ரூ.1.24 பணத்தை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் தற்போது காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறையின் உத்தரவின் பேரில் லோகநாதன் வீட்டில் சோதனை மேற்கண்ட போது கணக்கில் வராத ரூ.84,000 பணத்தைபறிமுதல் செய்தனர்.
News October 15, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளுர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் புதன்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமை திருவள்ளுர், இரண்டாம் புதன்கிழமை திருத்தணி, மூன்றாம் புதன் கிழமை பொன்னேரி, நான்காம் புதன் கிழமை ஆவடி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.