News August 16, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,477 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,430 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.16) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 9, 2025
திருவள்ளூரில் வாலிபர் தற்கொலை?

திருவள்ளூர்: நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(26). இவருக்கு ஜெயஸ்ரீ எனும் மனைவி உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறால் கோபித்துகொண்டு உறவினர் வீட்டிற்கு சென்ற பிரசாந்த், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்துகொண்டாரா..? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 9, 2025
திருவள்ளூர்: பேருந்தில் திடீரென மயங்கிய பெண் பலி!

திருவள்ளூர் அடுத்த பழைய கரிக்கலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி(39), பூ கட்டும் தொழில் செய்து வரும் இவர் திருவள்ளூர் வந்து விட்டு இரவு 7:30 மணியளவில் தடம் எண் 505 என்ற செங்குன்றம் சென்ற அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஒதிக்காடு அருகே பேருந்து சென்ற போது உமாபதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தானர்.
News December 9, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (8.12.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.


