News August 14, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஆக.14) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஆவடி, திருமுல்லைவாயல், பாரதி நகர், வேணுகோபால் நகர், வ.உ.சி நகர், கணேஷ் நகர், நேதாஜி நகர், சோழம்பேடு, வைஷ்ணவி நகர், சோழவரம், சோத்துபெரும்பேடு, அல்லிமேடு, மேட்டுசுரம்பேடு, மேட்டு காலனி, ஒரக்காடு, கம்மவார்பாளையம், குமரன் நகர், நல்லூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Similar News

News November 1, 2025

சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.81 லட்சம் வருவாய்

image

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 73 நாட்களில் பக்தர்களிடமிருந்து ரூ.81,71,715 வருவாய் வசூலாகியுள்ளது. 89 கிலோ தங்கம், 5 கிலோ 903 கிராம் வெள்ளி போன்ற நன்கொடைகளும் கிடைத்துள்ளன. இந்த வருவாய், கோவில் பராமரிப்பு மற்றும் தேவாலய பணிகளுக்காக பயன்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 1, 2025

திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு தடை

image

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (நவ.2 ந்தேதி), மாலை தொலைத்தொடர்புக்கான LVM3-M5 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எனவே பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News November 1, 2025

திருவள்ளூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!