News August 6, 2024
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News October 23, 2025
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (அக்.31) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயப் பெருமக்களும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரி இயங்கும்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(அக்.23) வழக்கம் போல் பள்ளி, கல்லூரி இயங்கும் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)
News October 22, 2025
திருவள்ளூர்: இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் (22.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு அவசர நிலையும், குற்றச் சம்பவங்களையும் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் செய்யப்பட்டது