News June 26, 2024
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 29 (திங்கள்கிழமை) ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
மாணவர் மரணத்திற்கு முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிதி உதவி

ஆர்கே பேட்டை ஒன்றியம் அம்மனேரி அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மிகுந்த வருத்தத்தையும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
News December 16, 2025
திருவள்ளூர் மாணவன் உயிரிழப்பிற்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம்

திருத்தணி அருகே கொண்டாபுரம் பள்ளியில், கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தது குறித்து எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
துப்புரவுத் தொழிலாளிக்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்

பேரம்பாக்கம் துப்புரவுத் தொழிலாளி பணியில் இருந்தபோது கடந்த சில நாட்களுக்கு முன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த அமைச்சர் நாசர் இன்று (டிச.16) நேரில் சென்று பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளியைச் சந்தித்து ரூ.1லட்சம் நிவாரண நிதி வழங்கினார். உடன் ஆட்சியர் மு.பிரதாப் இருந்தார்.


