News June 27, 2024
திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 27) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
திருவள்ளூர்: 1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ APPLY செய்ய கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News September 13, 2025
தலைமையாசிரியர்களை நியமிக்க கோரிக்கை

திருவள்ளூர் அரசு பள்ளிகளில், 273 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலாளி பணியிடங்களும் காலியாக இருப்பதால்,ஆசிரியர்களே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக கல்வித்துறை, அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News September 13, 2025
கல்விக்கடன்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக் கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் வரும் (செப்-15) அன்று திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படவுள்ளதாக கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார்.