News January 3, 2025
திருவள்ளூர் மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

‘ஸ்கரப் டைபஸ்’ என்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் பரவல் அதிரித்துள்ளது. விவசாயிகள், புதர்மண்டிய வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
Similar News
News December 7, 2025
திருவள்ளூரில் 600 வருட பழைய இடமா!

600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழவேற்காடு, சென்னைக்கு வடக்கே 55கிமீ தொலைவில் உள்ளது. கோரமண்டல் கடற்கரையில் உள்ள பழவேற்காடை டச்சுக்காரர்கள்,கிழக்கு திசையில் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ஒரு முக்கிய இடமாக, 1609ம் ஆண்டில் “குல்டிரா”என்ற கோட்டையை கட்டினர். பழவேற்காட்டிற்காக டச்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் போர்கள் நடத்தி, இறுதியில் பிரிட்டிஷ்காரர்கள் 1825ம் ஆண்டு பழவேற்காடை கைப்பற்றினர்.
News December 7, 2025
திருவள்ளூர்: சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

பூவை, போரூர் அருகே டியூஷன் சென்ற 8வயது சிறுவனை (டிச06) தெருநாய் கடித்துள்ளது. சிறுவன் முகம் கை, கால்களில் காயம் ஏற்பட்டு பூவிருந்தவல்லி GH சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் பூவிருந்தவல்லி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த சரளாதேவி என்பவரை நாய் கடித்துள்ளது. தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 7, 2025
திருவள்ளூர்: துடிதுடித்து 3 உயிர்கள் பலி!

திருவள்ளூர்: வெங்கல் அருகே புலியூர் கண்டிகை கிராமத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்ததில் வெங்கடேசன் (55) என்ற விவசாயியும், இரண்டு எருமை மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வெங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


