News May 16, 2024
திருவள்ளூர்: பேருராட்சித் தலைவர் விபத்தில் பலி.

திருவள்ளூர் அருகே திருமழிசை பேருராட்சித் தலைவர் வடிவேலு (62) (திமுக). இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இவர், தனது உறவினர் மூர்த்தியுடன் காரில் மண்ணூர் கூட்டுச்சாலையில் சென்ற போது, சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த வடிவேலு போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
திருவள்ளூர்: இன்று இதை செய்தால் செல்வம் பெருகும்…

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், நீங்கள் மாலை நேரத்தில் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்களுக்கு செல்வ வளம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க.
News November 19, 2025
திருவள்ளூர் தள்ளுவண்டி கடைகளுக்கு இனி கட்டாயம்

திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


