News March 27, 2024
திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர் அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 17, 2025
திருவள்ளூர்: B.E/B.Tech படித்தால் ரூ.50,000 சம்பளம்!

திருவள்ளூர்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
செங்குன்றம்: நிலத் தகராறில் மூவருக்கு வெட்டு!

செங்குன்றம்: சுரேந்தர்(34) என்பவர் ஆட்டந்தாங்கல் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த நவ.11ஆம் தேதி, நண்பர்களுடன் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம்(42), கூட்டாளிகளுடன் வந்து, அந்த இடத்தை உரிமை கோரியதில் தகராறு முற்றியது. இதில், பாலசுந்தரம் மூவரையும் வெட்டி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
திருவள்ளூரில் மழை ; பள்ளிகளுக்கு விடுமுறையா..?

திருவள்ளூர்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுபடி, இன்று(நவ.17) திருவள்ளூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்ரந்து, வரும் நவ.21ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.


