News March 19, 2024
திருவள்ளூர்: பயங்கரவாதிகள்…. நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News December 1, 2025
RED ALERT : திருவள்ளூரில் மழை கொட்டப் போகுது!

‘டிட்வா’ புயலின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்றும்(டிச.1), நாளையும்(டிச.2) சுமார் 20 செ.மி அளவிற்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்க ஏரியாவில் மழையா..?
News December 1, 2025
திருவள்ளூர்: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

திருவள்ளூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
திருவள்ளூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <


