News April 26, 2024
திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில் சிறப்பு!
திருவள்ளூர், தேவி மீனாட்சிநகரில் அமைந்துள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில். இங்கு 2004ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர்சுவாமி சிலை உள்ளது. இந்த இடம் புராண காலத்தில் ருத்ர வனம் என அழைக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரத்தில் விமானமும், 15 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்சிநேயர் தோற்றம் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலக வளாகத்தில் வரும் நவ.22ம் தேதி காலை10 மணி யளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News November 19, 2024
இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 19, 2024
திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
திருமுல்லைவாயல் மகளிர் தொழில் பூங்காவில் புதிதாக தொழில் தொடங்க தொழிற்மனைகளை விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in வாங்க இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் இணையதளத்தின் வாயிலாகவே விவரங்களை தெரிந்து கொண்டு தேவையானவற்றை நவ.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு.