News March 29, 2024
திருவள்ளூர்: நாளை முழு வேலை நாள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க நிலை உயர்நிலை மேனிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை(மார்ச்.30) முழு வேலை நாள் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். எனவே நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும்.
Similar News
News November 6, 2025
திருவள்ளூர்: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
திருவள்ளூர்: படகு வழியே சுடுகாட்டிற்கு செல்லும் அவலம்!

பழவேற்காடு, கோட்டைகுப்பம் மீனவ கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியினருக்கான சுடுகாட்டிற்கு செல்வதற்கு அங்குள்ள ஏரியின் கழிமுகப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மழை காலங்களில் சடலங்களை படகில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோட்டைகுப்பம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 6, 2025
திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய முதன்மைக் கல்வி அலுவலர்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக கற்பகம் இன்று பொறுப்பேற்றார். இவர் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பணி மாறுதல் பெற்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலராக பணியேற்றுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர். பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


