News October 11, 2025
திருவள்ளூர்: சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவாலங்காடு அருகே சின்னம்மாபேட்டை கிராமம் உள்ளது. இங்கு,
நெடுஞ்சாலையை ஒட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே, 60 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பலத்த மழை மற்றும் காற்று வீசியதால், மரம் வேரோடு சாய்ந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. மரம் சாலையில் குறுக்கே விழுந்ததால் சுமார் 7 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர்: தூக்கில் தொங்கிய வாலிபர் சடலம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சந்துரு(26) திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முந்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த சக்திவேலைக் கண்ட அவரது வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 8, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரி

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.07) முதல் இன்று காலை வரை பணிபுரியும் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பொறுப்பில் உள்ள காவல் நிலையங்கள், அதிகாரிகள் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த தகவல் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் அவசர நேரங்களில் உடனடி தொடர்பிற்காகவும் வழங்கப்படுகிறது.