News October 24, 2024
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பல நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களிடம் யாரேனும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு முன் பணம் செலுத்தும்படி தெரிவித்தால் உடனடியாக அந்நபரை குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Similar News
News December 19, 2025
திருவள்ளூர் பத்திரிகையாளர் சங்க புதிய அலுவலகம் திறப்பு!

திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்க அலுவலகம் இன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கலந்து கொண்டார். நிகழ்வில் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டு, சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவை கொண்டாடினர்.
News December 19, 2025
JUST IN:திருவள்ளூரில் 6.19 லட்சம் பேர் நீக்கம்

இன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 6,19,777 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 22,69,499 வாக்காளர்கள் உள்ளனர் என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


