News May 17, 2024
திருவள்ளூர்: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி அருகே பொன்பாடி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகள் ரஞ்சனி (17). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஏ படித்து வந்தார். இந்த நிலையில் ரஞ்சனி நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் ரஞ்சனி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
திருத்தணி: ராணுவ வீரர் வீர மரணம்!

திருத்தணி அடுத்த எஸ்.ஜே புரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(30). இவர் இன்று(டிச.4) காலை ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் குண்டடிபட்டு வீர மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு அந்த கிராமம் ஆழ்ந்த சோகத்தில் முழுகியுள்ளது. வீர மரணம் அடைந்த சக்திவேலுக்கு தாய், தந்தை, இரண்டு சகோதரிகள், மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
News December 5, 2025
திருவள்ளூர்: ஆசைப்பட்ட காவலர் பணி; பாதியில் முடிந்த கனவு பாதை!

திருவள்ளூர்: ஆவடி காவல் பட்டாலியன் பயிற்சியின் போது திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த காவலர் சந்தோஷிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர். சிறு வயதில் இருந்து ஆசைப்பட்டு காவலர் பணியில் சேர்ந்த உடன் திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 5, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவலர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.4) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


