News April 23, 2025
திருவள்ளூர்: கணவன்/மனைவி சண்டை தீரணுமா?

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு பகுதியில் கோவில் கொண்டிருக்கிறார் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர். சித்திரை மாதப்பிறப்பின்போன், முதல் 7 நாட்கள் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. சிவனுக்கான பூஜையை சூரியனே செய்வதாக ஐதீகம். இக்கோவிலில் சூரியனுக்கு கோதுமைப் பொங்கல்/பாயாசம் படைத்தால் மட்டும் போதும் எப்பேர்பட்ட கணவன்/மனைவி சண்டையானாலும் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *திருமணமான நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News April 25, 2025
மதுபான கடைகளை மூடு ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான கடைகளும் 01.05.2025 மே தினத்தன்று ஒருநாள் மட்டும் தற்காலிகமாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். மேலும் மீறி செயல்படும்ன் உரிமதார்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 25, 2025
திருவள்ளூர் குடியம் குகைகள் ட்ரெக்கிங்

திருவள்ளூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக குடியம் குகைகள் உள்ளது. வனத்துறை மூலம் அழைத்து செல்லப்படும் இந்த மலையேற்றம் மலையேற்றத்தோடு, தொல்லியல் சின்னங்களை பார்த்த அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில், https://www.trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் போகலாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க