News April 18, 2025
திருவள்ளூர்: இருதய நோயை குணப்படுத்தும் கோவில்

திருவள்ளூர், திருநின்றவூரில் அமைந்துள்ளது அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திங்கட்கிழமைகளில் வந்து பயபக்தியுடன் பிரார்தனை செய்தால் எப்பேர்பட்ட இதய நோயானாலும் குணமாகும் என பக்தர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட டாக்டர்கள் தங்கள் நோயாளிகள் குணமாக இங்கு வந்த பிரார்த்னை செய்கிறார்கள் எனவும் தகவல் உள்ளது. *நீங்களும் கண்டிப்பா போங்க. நண்பர்களுக்கும் பகிரவும்
Similar News
News November 25, 2025
திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் (நவ-28)ஆம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர் அனைவரும் பங்கேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள் அனைவரும் இதில் பங்கேற்று பயன்பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
திருவள்ளூர்: நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
News November 25, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


