News December 6, 2024
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 28, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 492 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் நிலம் சம்பந்தமாக 48, சமூக பாதுகாப்பு திட்டம் 27, வேலைவாய்ப்பு வேண்டி 18, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 36 மற்றும் இதர துறை 363 மனுக்கள் என மொத்தம் 492 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
News October 28, 2025
திருவள்ளூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
திருவள்ளூர்: கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் கொலை

திருவேற்காடு, பெருமாளகரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் டில்லிபாபு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் வினோத் என்பவரின் மனைவி நிவேதாவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் தனது நண்பன் மோகன் என்பவருடன் சேர்ந்து டில்லிபாபுவை நேற்று மதியம் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


