News December 5, 2024
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 5, 2025
திருவள்ளூரில் 3.89 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் 3.89 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
திருத்தணி: ராணுவ வீரர் வீர மரணம்!

திருத்தணி அடுத்த எஸ்.ஜே புரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(30). இவர் இன்று(டிச.4) காலை ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் குண்டடிபட்டு வீர மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு அந்த கிராமம் ஆழ்ந்த சோகத்தில் முழுகியுள்ளது. வீர மரணம் அடைந்த சக்திவேலுக்கு தாய், தந்தை, இரண்டு சகோதரிகள், மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
News December 5, 2025
திருவள்ளூர்: ஆசைப்பட்ட காவலர் பணி; பாதியில் முடிந்த கனவு பாதை!

திருவள்ளூர்: ஆவடி காவல் பட்டாலியன் பயிற்சியின் போது திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த காவலர் சந்தோஷிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர். சிறு வயதில் இருந்து ஆசைப்பட்டு காவலர் பணியில் சேர்ந்த உடன் திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


