News April 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று 09/04/2025 இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பதிவிடவும்*
Similar News
News November 27, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
ஆவடியில் பொது மக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (நவ.26) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தும், 60 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாார்.
News November 26, 2025
பூந்தமல்லி: வடமாநில வாலிபர் கொலை; 3 பேருக்கு சிறை

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 2017ஆம் ஆண்டு முகம் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரதீப் வழக்கில், ஹரிகுமார், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகிய 3 பேருக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று(நவ.25) தீர்ப்பளித்தது. இதில் ஹரிகுமாருக்கு 7 ஆண்டுகள், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகியோருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.


