News March 19, 2024
திருவள்ளூர்: அதிநவீன கேமராக்கள் துவக்கம்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 44 முக்கிய சாலைகளில் குளோவிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதிநவீன 106 IP கேமராக்கள் மற்றும் 86 ANPR கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் இன்று அதனை தொடங்கி வைத்தார்.
Similar News
News September 18, 2025
திருவள்ளூர்: குறைந்த விலையில் வாகனம் வாங்க வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையில் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டி.பிரிவு தலைமை உதவியாளரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறைந்த விலையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருவள்ளூர்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருவள்ளூரில் வெளுக்க போகும் மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.