News May 16, 2024
திருவள்ளூரில் மழை பெய்யும்

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 23, 2025
திருவள்ளூரில் நாளை மின் தடை!

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பூனிமாங்காடு, என். என். காலணி, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னைத்தூர், மாமண்டூர், வி.என். கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நாளை(டிச.24) மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
திருவள்ளூரில் வேலை வேண்டுமா..?

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக்கல்லூரி, திருத்தணி இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(டிச.24) திருத்தணி அரசு கலைக் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
News December 23, 2025
திருவள்ளூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம்.(SHARE)


