News April 2, 2025
திருவள்ளூரில் நூற்றாண்டு விழா போட்டிகள்

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபாடி, கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் 03.04.2025 முதல் 05.04.2025 வரை நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு 7401703482, 8072908634 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
திருவள்ளூர்: பச்சிளம் குழந்தை மரணத்தில் மர்மம்?

திருத்தணி: பிறந்து 54 நாட்களே ஆன பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, மருத்துவர் அளித்த புகாரையடுத்து, குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று(டிச.16) பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருத்தணி ஒன்றியம் பி.டி.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், (25). இவரது மனைவி நந்தினி(21). இவர்களுக்கு தமிழரசி(3) மற்றும் ஐஸ்வர்யா என்ற பிறந்து 54 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது.
News December 17, 2025
திருவள்ளூர்: போலீஸ் அத்துமீறலா..? அழைக்கவும்!

திருவள்ளூர் மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
திருவள்ளூர்: போலீசிடமே பெண்களுக்கு விலை பேசிய புரோக்கர்கள்

ஆவடி அடுத்த செவ்வாப்பேட்டை, காந்திநகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணைக்கு மஃப்டியில் சென்ற போலீசாரிடமே பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் விலை பேசிய முருகன்(25), பாஸ்கர்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று(டிச.16) தீர்ப்பளிக்கப்பட்டது.


