News August 15, 2024
திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.இதில், 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 2, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (1.11.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளாம்.
News November 1, 2025
எண்ணூர் கடலில் மூழ்கி பலி – எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த தேவகி, காயத்ரி, பவானி, ஷாலினி ஆகியோர் இன்று (01.11.2025) சென்னை எண்ணூர் கடற்கரையில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. கும்மிடிப்பூண்டி MLA டி.ஜே. கோவிந்தராஜன் மருத்துவர்களிடம் விரைவாக பிரேதப் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
News November 1, 2025
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.81 லட்சம் வருவாய்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 73 நாட்களில் பக்தர்களிடமிருந்து ரூ.81,71,715 வருவாய் வசூலாகியுள்ளது. 89 கிலோ தங்கம், 5 கிலோ 903 கிராம் வெள்ளி போன்ற நன்கொடைகளும் கிடைத்துள்ளன. இந்த வருவாய், கோவில் பராமரிப்பு மற்றும் தேவாலய பணிகளுக்காக பயன்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


